தேவகோட்டை: தேவகோட்டை ஜோசப் பள்ளி மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடக்கிறது. பள்ளி தாளாளர் வின்சென்ட் அமல்ராஜ் முன்னிலையில் எம்.எல்.ஏ. மாங்குடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 14 வயது, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாமிடமும், பெண்கள் பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும், 14 வயது, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாமிடமும் வென்றனர். வளைய பந்து போட்டியில் ஆடவர் பிரிவில் 19 வயது வரை ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 14 வயதில் இரண்டாமிடம் பெண்கள் பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.