நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் விளையாட்டு விழா செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரவேற்றார். டி.எஸ்.பி. கவுதம் போட்டி களில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினார். இன்ஸ்பெக்டர் சரவணன், டாக்டர் குமரேசன், மாவட்ட நேரு யுவகேந்திரா யோகநாதன் பேசினர்.
தனிநபர் பிரிவில் வணிக மேலாண்மை பிரிவு மாணவர் பேட்ரிக், மாணவிகள் பிரிவில் வேதியியல் துறை பவதாரிணி முதலிடம் வென்றனர். ஒட்டு மொத்த முதலிடத்தை சுனில் சேத்ரி அணியும், 2ம் இடத்தை பிவி சிந்து அணியும் வென்றனர்.
கல்லூரி முன்னாள் செயலாளர் ஆசீர்வாதம், சேவுகன் அண்ணாமலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் லூர்துராஜ், கல்லூரி துணை முதல்வர்கள், கல்வி முதன்மையர்கள் பங்கேற்றனர்.