நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
சி.ஐ.எஸ்.எப்., சீனியர் கமாண்டண்ட் சங்கர் குமார் ஜா தலைமையேற்றார். துணை கமாண்டிங் ஆபிசர் மனோஜ் பிரபாகர் பேசினார். பள்ளி சேர்மன் குமரேசன் முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் அருண்குமார் வாழ்த்தினார். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறினார்.