/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வசந்தப் பெருவிழா: பக்தர்கள் பால்குடம்
/
திருப்புத்துாரில் வசந்தப் பெருவிழா: பக்தர்கள் பால்குடம்
திருப்புத்துாரில் வசந்தப் பெருவிழா: பக்தர்கள் பால்குடம்
திருப்புத்துாரில் வசந்தப் பெருவிழா: பக்தர்கள் பால்குடம்
ADDED : ஏப் 23, 2025 05:53 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் மாலை கொடியேற்றி,காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளம் பவனி வருகிறார்.
மூன்றாம் நாளில் பொங்கல் விழா நடந்தது. நேற்று ஐந்தாம் திருநாளை முன்னிட்டு பால்குட திருவிழா நடந்தது. நேற்று காலை கோட்டைக்கருப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு முடிந்து பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு பூமாயி அம்மன் கோயில் வந்தனர்.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் வெள்ளி அங்கியில், சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பக்தர்கள் பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிந்தனர். ஏப்.26 இரவில் அம்மன் ரத ஊர்வலமும், ஏப்.27 காலையில் தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டும், இரவில் தெப்பத்திருவிழா, திருக்குள தீபவழிபாடும் நடைபெறும்.