/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூவந்தி மருத்துவமனை முன் தேங்கிய மழை நீர்
/
பூவந்தி மருத்துவமனை முன் தேங்கிய மழை நீர்
ADDED : அக் 12, 2024 04:37 AM

பூவந்தி: பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பூவந்தியைச் சுற்றிலும் கீரனுார், பாப்பான்வலசை, சுண்ணாம்பூர், கிளாதரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் பூவந்தியைச் சுற்றிலும் கிரானைட் கம்பெனிகள், கல்வி நிலையங்கள் என உள்ளன. பிரசவம் , விபத்து உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதி தாழ்வாகவும் ரோடு உயரமாகவும் இருப்பதால் மழை காலங்களில் மழை தண்ணீர், கழிவு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தேங்கி குட்டை போல் மாறுவதுடன், சுகாதார கேட்டையும் ஏற்படுத்துகிறது. மழை நீர் செல்ல வழியின்றி நீண்ட நாட்கள் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் படை எடுத்து நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
காய்ச்சல், சளி போன்றவற்றுடன் வருபவர்களுக்கு மேலும் மழைநீரில் நடந்து செல்வதால் நோய் தொற்றும் அதிகரித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை முன் மழை நீர் தேங்கா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

