ADDED : ஜூலை 20, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பேரவை கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் திரவியம் வரவேற்றார்.
மாநில செயலாளர் ஜெபமாலை மேரி தீர்மானங்களை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன் துவக்கி வைத்தார்.
பொது செயலாளர் மகாலிங்கம் அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் திருவேங்கடம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

