ADDED : ஏப் 04, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் மாநில அளவிலான இருபாலர் கபடி போட்டி 2 நாட்கள் பகல், இரவு ஆட்டமாக நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் 16, ஆண்கள் பிரிவில் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துவக்கி வைத்தார்.
துணை தலைவர் ரமேஷ், தி.மு.க., நகர் செயலாளர் பாலமுருகன் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி., அணி முதலிடம், சேலம் அயோத்தியாபட்டணம் கே.ஏ.கே.சி., அணி 2 ம் இடம், மதுரை சி.பி.ஆர்., அணி 3ம் இடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் கட்டகுடி அணி முதலிடம், ராஜராஜன் கல்லுாரி அணி 2 ம் இடம், சேலம் அணி 3 ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகைகள் வழங்கினர்.

