/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மாநில செஸ் போட்டி
/
திருப்புத்துாரில் மாநில செஸ் போட்டி
ADDED : பிப் 01, 2024 04:11 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், மாவட்ட சதுரங்க கழகம், தாலுகா சதுரங்க கழகம் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டிகளை நடத்தின.
கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பல மாவட்டங்களைச்சேர்ந்த 170க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
ஆண்கள் 9 வயதிற்குட்பட்ட பிரிவில் அமுதன், கார் முகிலன், 11 வயதிற்குட்பட்ட நித்தின் ராமசாமி, கிஷோர் ரித்தீஷ், 13 வயதிற்குள் தர்ஷன், தேவதர்ஷன், 17 வயதிற்குள் ஸ்ரீராம் சுந்தர், பிரவீன் முதல் இரு இடங்களை வென்றனர்.
பெண்கள் பிரிவில் 9 வயதிற்குள் குகாஸ்ரீ, யாழினி, 11 வயதிற்குள் அவந்திகா, ரித்திகா ஸ்ரீ, 13 வயதிற்குள் அனுநிதா, அனுமிதா, 17 வயதிற்குள்ஹர்ஷா, சரோஜினி முதல் இரு இடங்களை வென்றனர்.
பரிசளிப்பு விழாவில் தாலுகா தலைவர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். பள்ளி தாளாளர் ரூபன் தலைமை வகித்தார். நிர்வாகி விஜயாவிக்டர், வர்த்தக சங்க கௌரவதலைவர் நாகராஜன், முதல்வர் தபசும் ஹரீம் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கண்ணன்வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.
வருவாய் ஆய்வாளர்கீதா வாழ்த்தினார். தலைவர் சரவணக்குமார் நன்றி கூறினார்.