நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்:
திருப்புத்துார் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஓவியப் போட்டி நடந்தது.
இப்பள்ளியில் குளோபல் ஈவண்ட் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில ஓவியப்போட்டியில் மாணவ,மாணவியர் பங்கேற்றனர். தேசிய பசுமை பாதுகாப்பு படை தலைவர் முத்தமிழ் கனி துவக்கி வைத்தார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார். வென்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை தாளாளர் அமீர் பாதுஷா வழங்கினார்.