ADDED : மார் 06, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கோயம்புத்துார் சுந்தராபுரத்தில் மாநில அளவிலான பளுதுாக்கும் போட்டி நடைபெற்றது. இதில், மாநில அளவில் இருந்து 250 வீரர்கள் பங்கேற்றனர்.
60 கிலோ எடை பிரிவினருக்கான வயது 19 முதல் 23 க்கு உட்பட்ட வீரர்களுக்கான போட்டியில் காளையார்கோவிலை சேர்ந்த திருப்பதி 212.5 கிலோ எடையை துாக்கி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதே போன்று சீனியர் பிரிவு (வயது 23 முதல் 35 ) போட்டியிலும் முதலிடம் பிடித்தார்.
திடமான வீரர் பட்டத்தையும் வென்றார். தமிழ்நாடு அளவில் ஒட்டு மொத்த பளுதுாக்கும் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.

