/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனைத்து பஸ்களிலும் முதலுதவி பெட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
அனைத்து பஸ்களிலும் முதலுதவி பெட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து பஸ்களிலும் முதலுதவி பெட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து பஸ்களிலும் முதலுதவி பெட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : ஜன 10, 2025 05:05 AM
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக தினசரி பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தின் கீழ் 11 கிளை பணிமனைகள் மூலம் இந்த வழித்தடத்தில் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பழைய பஸ்கள், நீல நிற பஸ்கள், சமீபத்தில் வழங்கப்பட்ட மஞ்சள் நிற பஸ்கள் உள்ளிட்டவற்றில் கூட முதலுதவி பெட்டி இருப்பதில்லை. இருந்தாலும் அதனுள் எந்த பொருளும் இருப்பதில்லை.
புதிய இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனம் வாங்கினாலும் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் அனைத்து வாகனங்களிலும் முதல் உதவி பெட்டிகள் வைக்கப்படும், அதில் பஞ்சு, கட்டுப்போடும் துணி, காயத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மருந்து, காயத்தின் மீது தடவப்படும் மருந்து வைக்கப்படும்.
அதிவேகத்தில் செல்லும் பஸ் திடீரென நிலை தடுமாறும் போது பஸ்சினுள் அமர்ந்திருக்கும் பயணிகள் காயமடைய வாய்ப்புண்டு, அதுபோல சிறு விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு கண்டக்டர்களே முதலுதவி பெட்டியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம், இதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுவது உண்டு.
அரசு பஸ்களில் முதலுதவி பெட்டியே மாயமாகி உள்ளதால் விபத்துக்களின் போது முதல் உதவி சிகிச்சை செய்ய முடியாமல் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து பஸ்களிலும் முதலுதவி பெட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

