/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெருக்களில் விபத்தை ஏற்படுத்தும் கற்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
தெருக்களில் விபத்தை ஏற்படுத்தும் கற்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தெருக்களில் விபத்தை ஏற்படுத்தும் கற்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தெருக்களில் விபத்தை ஏற்படுத்தும் கற்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : அக் 19, 2025 09:15 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தெருக்கள் தோறும் பலரும் ரோட்டை ஆக்கிரமித்து கட்டியிருப்பதுடன் அதற்கு பாதுகாப்பாக முண்டுகற்கள், கல் துாண்களை வைத்திருப்பதால் தினசரி விபத்து நடக்கிறது.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்காக திருப்புவனத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. விசாலமான தெருக்களில் கூடுதல் வீடுகள் கட்டும் பணிக்காக பலரும் ரோட்டை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகின்றனர். திருப்புவனம் பேரூராட்சியில் தெருக்கள் குறைந்த பட்சம் 10 அடி அகலத்தில் இருந்து 30 அடி அகலம் வரை இருந்தன. ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டின் அகலம் குறைந்ததுடன் ஆக்கிரமிப்பிற்கு பாதுகாப்பாக கற்களை வைத்திருப்பதால் விபத்து நேரிட்டு வருகின்றன.
தெருக்களில் சைக்கிள், டூவீலர்கள் கூட செல்ல முடியவில்லை. சைக்கிளில் செல்லும் சிறுவர்கள் தடுமாறி பாறைகளில் விழுந்து காயமடைகின்றனர். திருப்புவனத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து பலரும் ஆழ்துளை கிணறும் அமைத்துள்ளதுடன் அதனை பாதுகாப்பாதற்காகவும் முண்டு கற்களை வைத்துள்ளனர். திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை.
இதனால் பலரும் பொது இடத்தை நிரந்தரமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். எனவே தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், விபத்து ஏற்படும் வகையில் கற்களை வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.