/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணல் திருட்டால் கால்வாய் கரை சேதம்
/
மணல் திருட்டால் கால்வாய் கரை சேதம்
ADDED : அக் 19, 2025 09:16 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நகரை ஒட்டியுள்ள நீர் வரத்து கால்வாய்களில் மணல் திருட்டு காரணமாக உடைப்பு ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது.
வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பிரமனுார் உள்ளிட்ட சுற்று வட்டார கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனுார் கண்மாய் வரை ஏழு கி.மீ., துாரத்திற்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது. இதில் பெரும்பகுதி கால்வாய் திருப்புவனம் நகர் வழியாக செல்கிறது. கால்வாய் கரையில் கட்டுமான பணிக்காக ஆங்காங்கே பலரும் மணல் திருடியதால் கரைகள் பல இடங்களில் பலவீனமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வைகை அணையில் பாசனத்திற்கு ஆயிரம் முதல் மூவாயிரம் கன அடி தண்ணீர் வரை திறக்க வாய்ப்புள்ளது.
பிரமனுார் கால்வாய் குறுகி இருப்பதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும், நகர்ப்பகுதியில் அதிவேகமாக வரும் தண்ணீர் குறைந்த பட்சம் 15 நாட்கள் வரை இரு கரைகளையும் தொட்டு செல்லும், தொடர்ச்சியாக தண்ணீர் அதிவேகமாக செல்லும் போது மணல் திருட்டால் பலவீனமான வண்டல்நகர் உள்ளிட்ட கரைப்பகுதி வழியாக நகரினுள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பலவீனமான கரைப்பகுதியை சரி செய்வதுடன் மணல் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.