/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கதை எழுதும் போட்டி கல்லல் மையத்திற்கு பாராட்டு
/
கதை எழுதும் போட்டி கல்லல் மையத்திற்கு பாராட்டு
ADDED : ஏப் 26, 2025 05:31 AM
சிவகங்கை : மாவட்ட அளவில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு நடத்தப்பட்ட 'நம்ம ஊரு கதை' தலைப்பில் கதை எழுதும்போட்டியில் கல்லல் அருகே ஆற்காடு தொடக்கபள்ளி மையம் தேர்வாகியுள்ளது.
இம்மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 420 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களுக்கான கதை எழுதும் போட்டி நடந்தது. தன்னார்வலர்களின் உதவியுடன் அனைத்து மைய மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட அளவில் சிறந்த கதையை வழங்கிய மையமாக கல்லல் அருகே ஆற்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வாகியுள்ளது. இதற்கான பாராட்டு விழாவிற்கு உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு தலைமை வகித்தார். வெற்றி பெற்ற 23 மாணவர்களுக்கு சான்று மற்றும் கேடயம் வழங்கினர்.
கல்லல் வட்டார கல்வி அலுவலர் கோதை முன்னிலை வகித்தார். தன்னார்வலர் அழகு மீனா, தலைமை ஆசிரியைதமிழ்மதி, உதவி ஆசிரியை ஏஞ்சலின் மேரி மாணவர்களை பாராட்டினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரதிமாலா நம்ம ஊரு கதை வெற்றியாளர்கள் குறித்து விளக்கம் அளித்தார்.