/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மூன்று மாதமாக எரியாத தெருவிளக்குகள்
/
மூன்று மாதமாக எரியாத தெருவிளக்குகள்
ADDED : அக் 31, 2025 12:30 AM
சிங்கம்புணரி:  சிங்கம்புணரி அருகே மூன்று மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சியில் ஆத்தங்கரைப்பட்டி, சூரக்குடி ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் மூன்று மாதங்களாக எரியவில்லை.
அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். ஆறு, காடுகளை ஒட்டிய பகுதி என்பதால் இப்பகுதியில் பாம்பு தொல்லை அதிகம் உள்ளது.
ரோட்டில் வெளிச்சம் இல்லாத நிலையில் பாம்புகள் நடமாட்டத்திலிருந்து தப்பிக்க மக்கள் சிரமப்படுகின்றனர்.
சுற்று வட்டாரத்தில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிராமத்தில் நிலவும் இருட்டு மக்களுக்கு பீதியை கிளப்புகிறது.
சோணமுத்து, தே.மு.தி.க., நிர்வாகி, காளாப்பூர்: கிராமத்தில் பல இடங்களில் இரண்டு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
வழிப்பறி, திருட்டு சம்பவங்களுக்கு இருட்டு துணை போகும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அனைத்து தெருவிளக்குகளையும் சீரமைக்க வேண்டும், என்றார்.

