/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெளிச்சம் இல்லாத தெருவிளக்குகள்; திருப்புத்துார் மக்கள் அவதி
/
வெளிச்சம் இல்லாத தெருவிளக்குகள்; திருப்புத்துார் மக்கள் அவதி
வெளிச்சம் இல்லாத தெருவிளக்குகள்; திருப்புத்துார் மக்கள் அவதி
வெளிச்சம் இல்லாத தெருவிளக்குகள்; திருப்புத்துார் மக்கள் அவதி
ADDED : ஜூலை 22, 2025 11:41 PM
திருப்புத்துார்; திருப்புத்துாரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சாலை போக்குவரத்து வசதிக்காக கூடுதல் வெளிச்சம் தரும் தெரு விளக்கு, பாதசாரிகள் கடக்க வரிசை கோடு அமைக்க' பொதுமக்கள் மனு அளித்தனர்.
முன்னாள் ஆசிரியர் இளங்கோவன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பயணிகள் வெளியே வரவும், உள்ளே நுழையவும் சாலையை கடந்து செல்லும் பகுதியில் ஜீப்ரா வரிசை வெள்ளைக் கோடு வரைய வேண்டும். முக்கிய ரோடுகளில் பாதசாரிகள் கடக்கும் இடம் அனைத்திலும் இதை வரைய வேண்டும்.
திருப்புத்துார் அக்னிபஜார் பகுதியில் பெரியகடை வீதி ரோடு, சிங்கம்புணரி ரோடு, புதுக்கோட்டை ரோடு சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பில் புதுக்கோட்டை ரோட்டிலிருந்து வரும் வாகனங்களுடன் மற்ற பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது.
அப்பகுதியில் போதிய சிக்னல் வசதி இல்லாதது மோதலுக்கு வழி வகுக்கிறது. அதனால் சிக்னல் அமைக்க வேண்டும்.
மேலும், நகரின் முக்கிய ரோடுகளில் உள்ள தெருவிளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் ரோட்டில் படுத்திருக்கும் மாடுகள் தெரியாமல் விபத்து நடைபெறுகிறது. இதனால் முக்கிய ரோடுகளில் வெளிச்சம் தரும் சோடியம் விளக்குகள் பொருத்த வேண்டும்.