/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்
/
மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்
மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்
மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்
ADDED : பிப் 06, 2024 11:59 PM
காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டை அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை மற்றும் கோயில் அருகில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பாஜ., வினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். நேற்று காலை மதுக்கடை முன்பு பாஜ., வினர் கூடினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சமாதான கூட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பால்துரை தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, போலீசாருக்கும் பா.ஜ., வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் வரும் பிப்.13ம் தேதி டாஸ்மாக் மேலாளர் தலைமையில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

