/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை தொய்வு
/
மானாமதுரை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை தொய்வு
மானாமதுரை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை தொய்வு
மானாமதுரை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை தொய்வு
ADDED : ஜூன் 20, 2025 12:19 AM
மானாமதுரை: மானாமதுரையில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலைக்கல்லுாரியில் 290 இருக்கைகளில் தற்போது வரை 80 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
மானாமதுரை பகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி துவங்க வேண்டுமென நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மானாமதுரையில் புதிதாக அரசு கலைக்கல்லூரி துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த மாதம் செய்களத்தூர் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் பாலிடெக்னிக் வளாகத்தில் தற்காலிகமாக புதிய அரசு கலைக்கல்லூரி துவங்கியது.
இக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் போன்ற 5 பாடப்பிரிவுகளில் 290 மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.
தற்போது வரை 80 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வர் கோவிந்தன் தெரிவித்தார். ஜூன் 30ம் தேதி முதல் வகுப்பு துவங்க உள்ளது.