/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் இன்று மாணவர் குறைதீர் முகாம்
/
சிவகங்கையில் இன்று மாணவர் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 19, 2025 02:42 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேறிய, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இன்று (ஜூன் 19) மாணவர் குறைதீர் முகாம்' நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி ,தவறிய மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் உயர்கல்விக்கான வழிகாட்டும் விதமாக மாணவர் குறைதீர் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
இதில் மாணவர்கள் உயர்கல்வி படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தொடரவும், வேலைவாய்ப்பு பெறும் டிப்ளமோ படிப்பிற்கும், தனியார் கல்லுாரிகளில் உள்ள படிப்பு சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையை நேரிலோ, அலைபேசி எண் 94871 71986ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.