ADDED : ஜூலை 16, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் 1990 லிருந்து 1993ம் ஆண்டு வரை விலங்கியல் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஆட்சி குழு செயலாளர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார்.
முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். முன்னாள் விலங்கியல் பேராசிரியர் முகமது பாரூக் கலந்து கொண்டார். வேதியியல் துறை தலைவர் செய்யது அபுதாஹிர், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ரோஷன் ஆரா பேகம் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.