/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கடையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி துர்நாற்றத்தில் மாணவர்கள் தவிப்பு
/
சாக்கடையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி துர்நாற்றத்தில் மாணவர்கள் தவிப்பு
சாக்கடையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி துர்நாற்றத்தில் மாணவர்கள் தவிப்பு
சாக்கடையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி துர்நாற்றத்தில் மாணவர்கள் தவிப்பு
ADDED : செப் 30, 2025 04:11 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி வ.உ.சி., ரோடு காந்திபுரம் 5வது தெருவில் வ.உ.சிதம்பரனார் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. 2010ல் கட்டப்பட்ட இப்பள்ளியில் 75க்கும் மேற்பட்ட மாணவர்களும் 3 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் பொது கழிப்பிட குழாய் செல்வதால் மழைக்காலங்களில் சாக்கடை பள்ளி வளாகத்திற்குள் நிரம்பி துர்நாற்றம் வீசும். மேலும், காரைக்குடியின் மொத்த கழிவுநீரும் செல்லக்கூடிய
கழிவு நீர் கால்வாயில் பள்ளி முன்பு அமைந்துள்ளதால், மாணவர்களுக்கு சுகாதாரக் கேடு நிலவுகிறது. மேலும் துர்நாற்றத்தாலும் நோய் அபாயத்தாலும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பெற்றோர்கள் கூறுகையில்: பள்ளி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது. பள்ளி காம்பவுண்ட் சுவரை ஒட்டி மிகப்பெரிய சாக்கடை கால்வாய் ஓடுகிறது. மழைக்காலங்களில் மொத்த சாக்கடையும் இவ்வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. தவிர பள்ளி வளாகத்திலும் சாக்கடை செல்கிறது. சாக்கடை நிரம்பும் போது பள்ளியில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மாணவர்களுக்கு பல்வேறு நோய் அபாயம் நிலவுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்: பல நாட்களாக சாக்கடை துார்வாரப்படாமல் கிடந்தது. புகார் அளித்ததன் பெயரில் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.