/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உலக சுற்றுலா தினத்தில் கீழடியில் குவிந்த மாணவர்கள்
/
உலக சுற்றுலா தினத்தில் கீழடியில் குவிந்த மாணவர்கள்
உலக சுற்றுலா தினத்தில் கீழடியில் குவிந்த மாணவர்கள்
உலக சுற்றுலா தினத்தில் கீழடியில் குவிந்த மாணவர்கள்
ADDED : செப் 28, 2024 06:40 AM

கீழடி, : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கீழடி அருங்காட்சியகத்தை தினமும் பலர் கண்டு ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடுகின்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தை காண தமிழக சுற்றுலாதுறையும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நேற்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை அருகே பொட்டப்பாளையம் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கீழடி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பற்றிய விபரங்கள் உள்ளிட்டவைகளையும் அறிந்து ஆச்சர்யமடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அருங்காட்சியகத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தலாம், உலக சுற்றுலா தினம், அருங்காட்சியக தினம் உள்ளிட்ட தினங்களை கொண்டாடலாம், சுற்றுலா பயணிகளை வரவேற்க விசேஷ ஏற்பாடுகள் செய்யலாம், ஆனால் கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதில் இருந்து விசேஷ நாட்களில் எந்த வித ஏற்பாடுகளும் செய்வதில்லை.