/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
79 மீட்டர் தேசிய கொடி கோலமிட்ட மாணவர்கள்
/
79 மீட்டர் தேசிய கொடி கோலமிட்ட மாணவர்கள்
ADDED : ஆக 14, 2025 11:23 PM

திருப்புத்துார், ;திருப்புத்துார் அருகே தேரேந்தல்பட்டி எஸ்.கே.எஸ்.பப்ளிக் பள்ளியில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் இணைந்து 79 மீட்டர் நீளத்தில் தேசியக் கொடியை கோலமிட்டு வரைந்தனர்.
பள்ளி வளாகத்தில் மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடன் 79 மீட்டர் நீளத்தில் தேசிய கொடியை மாணவர்கள் வரைந்தனர். பலுான்களை பறக்கவிட்டும் உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர்ந்து வரையப்பட்ட கொடிக்கருகில் நின்று கைத்தட்டியும், சல்யூட் அடித்தும் கொடி மரியாதை செலுத்தினர்.
மேலும் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, நீல புரட்சியான நாட்டின் சாதனைகளை நினைவு கூர்ந்து வண்ண கோலப்பொடிகளால் மாணவர்கள் வரைந்தனர்.