ADDED : செப் 23, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: இடைய மேலுாரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் பிளஸ் 2 படிக்கிறார். புதுப் பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் இவர் ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார்.
இருவரும் நேற்று இடையமேலுாரில் இருந்து புதுப்பட்டிக்கு டூவீலரில் சென்றனர். டாமின் ஆர்ச் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி மாணவர்கள் இருவருக்கும் எலும்பு முறிவு மற்றும் ரத்தக்காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் 108 ஆம் புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.