/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் 25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
திருப்புத்துாரில் 25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
திருப்புத்துாரில் 25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
திருப்புத்துாரில் 25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : மே 05, 2025 07:26 AM
திருப்புத்துார் : திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ. கல்லூரியில் வணிகவியல் படித்த பழைய மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இக்கல்லுாரியில் 1997 -- 2000 ம் ஆண்டில் பி.காம்., படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டிற்கு பின் நேற்று கல்லுாரியில் ஒருவரை ஒருவர் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர்களை ஒருங்கிணைத்தார்.
கல்லுாரியில் 80 மாணவர்கள் வரை சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லுாரி ஆட்சிக்குழு தலைவர் ராமேஸ்வரன், செயலர் ஆறுமுகராஜன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் அழகப்பன் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறை, பேராசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
பேராசிரியர்கள் ஓய்வு பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்தனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் கண்ணபிரான் தலைமையில் ஒருங்கிணைத்தனர்.