ADDED : ஜூலை 04, 2025 02:53 AM

இளையான்குடி: இளையான்குடியிலிருந்து பகைவரைவென்றான் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்துள்ளது.
இளையான்குடியில் இருந்து பகைவரை வென்றான் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள்,கிராம மக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கருவேல மர முட்கள் குத்தி காயமடைகின்றனர்.
பாலம் சேதமடைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.