/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி
/
பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 26, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகேயுள்ள வண்ணாரவயல், நெஞ்சத்துார் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பள்ளி,கல்லூரி மாணவர்கள் சாலைக்கிராமம், சூராணம், இளையான்குடி பகுதியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லுாரி செல்லும் நேரத்தில் பஸ் இல்லாமல் தாமதமாக வருவதால் சிரமப்படுகின்றனர்.
மாலையில் வீடு திரும்பும் போதும் போதிய பஸ் வசதி இல்லை. இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த வண்ணாரவயல் மற்றும் நெஞ்சத்துார் கிராம மக்கள் எம்.எல்.ஏ., தமிழரசியிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.