தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு


ADDED : ஆக 16, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்,ஆக.17-

திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களை அலைக்கழிப்பதால் மாணவ, மாணவியர் தவிப்பிற்குள்ளாகின்றனர்.

பள்ளி, கல்லூரி, அரசு பணிக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு வருமானம், ஜாதி, இருப்பிட சான்று மிகவும் முக்கியம், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மண்டல தாசில்தார் ஆகியோர் விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்குவார்கள், தேவைப்படும் நகல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம், இதன் மூலம் அலைச்சல் மிச்சமாகும் என கடந்த சில வருடங்களாக சான்று வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது தான் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில சான்றுகளை மூன்று முதல் ஆறு மாத காலம் வரைதான் பயன்படுத்த முடியும், எனவே மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து சான்று பெற்று வருகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தற்போது இணையதளம் மூலம் சான்று கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஒரே நாளில் வழங்க கூடிய சான்றுகளுக்கு கூட ஒரு வாரம் வரை காக்க வைக்கின்றனர். சான்றுகளுக்கு நேரில் சென்று கேட்டால் கூட வழங்க மறுக்கின்றனர்.

இதனால் மாணவ, மாணவியர் கவுன்சிலிங் செல்ல முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தினசரி 100 மாணவர்கள் வரை சான்று கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் 40 சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே சான்றுகள் வழங்கப்படுகின்றன. திருப்புவனம் தாலுகாவைச் சேர்ந்த பல கிராமங்கள் மதுரை நகரை ஒட்டி அமைந்துள்ளன. இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பதுடன் தாலுகா அலுவலகத்திற்கு இரண்டு பஸ்கள் மாறி வந்து நேரில் அலைய வேண்டியுள்ளது என புலம்புகின்றனர்.

குறிப்பிட்ட சில சான்றுகளுக்கு மட்டுமே வருவாய்த்துறையினர் நேரில் விசாரணை நடத்த வேண்டும். வருவாய்த்துறையினர் வேண்டுமென்றே மாணவ, மாணவியர்களை அலைக்கழித்து வருவதால் கவுன்சிலிங்கிற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

ஜாதி சான்று இருந்தால் மட்டுமே அரசு விடுதிகளிலும் இடம் கிடைக்கும், எனவே மாவட்ட நிர்வாகம் மாணவ, மாணவியர்களுக்கு விரைந்து சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us