/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கண்டுபிடிப்பை பார்வையிட்ட மாணவர்கள்
/
காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கண்டுபிடிப்பை பார்வையிட்ட மாணவர்கள்
காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கண்டுபிடிப்பை பார்வையிட்ட மாணவர்கள்
காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கண்டுபிடிப்பை பார்வையிட்ட மாணவர்கள்
ADDED : செப் 27, 2025 04:13 AM

காரைக்குடி: காரைக்குடி சிக்ரியில் நடந்த பார்வையாளர் தினத்தில் ஏராளமான மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
காரைக்குடி சிக்ரி நிறுவனம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 37 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன நாளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் செப்.26 பார்வையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.நேற்று நடந்த பார்வையாளர் தின விழாவை மூத்த விஞ்ஞானி ஜோனாஸ் டேவிட்சன் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பார்வையிட்டனர்.
மின்வேதியியல் உணரிகள், மின்வேதியியல் துறைக்கான நவீன கனிம மூலப்பொருட்கள், மின் கரிம மற்றும் கனிம வேதியியல், நோய்க் கிருமிகளை ஆராய பயன்படும் நவீன பயோ சென்சார், மழைநீரை சேமிக்கும் வகையிலான தரைதள கான்கிரீட், உலோக அரிமானம் தடுப்பு, புராண மற்றும் தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோகமான ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்முலாம் பூசுதல் மற்றும் நானோ மின் வேதியியல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது.
சிமென்ட், ஜல்லி, பிளாஸ்டிக் கழிவு மூலம் தயாரிக்கப்பட்ட மழைநீர் சேகரிக்கக் கூடிய தரைதள கான்கிரீட் மற்றும் பேவர் பிளாக், மாற்று எரிசக்தியான தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி, உப்பு நீரில் மின்சாரம் தயாரிப்பு, 3டி பிரின்டிங், மண் பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.