/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீண்டும் மாணவர்களுக்கு போட்டி நிதி ஒதுக்கீடு வந்தால் தான் பரிசு அதிர்ச்சியில் மாணவர்கள்

ADDED : ஆக 22, 2025 10:01 PM
சிவகங்கை பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழா போட்டிகளுக்கு பரிசு அறிவிக்காமல் மீண்டும் போட்டி நடத்துவது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக சட்ட பேரவை விதி 110ன் கீழ் தமிழக முதல்வர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என சட்டசபையில் அறிவிப்பு செய்தார். இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.30ல் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது.
போட்டி நடந்து முடிந்து 3 மாதம் கடந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
மே மாதம் பள்ளி விடுமுறை என்றும் பாராமல் பல்வேறு பள்ளிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டும் பரிசு வழங்காதது மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஆக., 25ஆம் தேதி தமிழ் வார விழா போட்டி நடத்தப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறுகையில், ஏற்கனவே நடந்த போட்டி தனி, இது தனி ஏற்கனவே நடந்த போட்டிக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கிய பிறகு பரிசு பொருட்கள் வழங்கப்படும், என்றார்.