/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வு
/
மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வு
மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வு
மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வு
ADDED : மே 24, 2025 11:17 PM
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மானாமதுரையில் 40 வருடங்களுக்கு முன்பு குடிநீர் திட்டத்திற்காக போடப்பட்ட குழாய்கள் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 39 கோடி ஒதுக்கப்பட்டு புதிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜகம்பீரம் அருகே வைகை ஆற்றில் தண்ணீர் உறிஞ்சப்படும் பகுதியிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 4500 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேலும் நகராட்சியை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளன.
இப்பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் ஆய்வு செய்தனர்.