ADDED : செப் 19, 2025 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்வாதார திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தாட்கோ (ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்) மேலாளர் செலினா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடர், பழங்குடியின விண்ணப்பதாரர்கள் இணையதளம் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதை எளிமை படுத்தும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இ--சேவை மையங்களில் தாட்கோ செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விண்ணப்பங்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.