/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடியிருப்பில் சேதமான சின்டெக்ஸ் தொட்டியால் அவதி

ADDED : ஆக 05, 2025 05:25 AM
சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடி யிருப்பு கிராமத்தில் குடிநீர் தொட்டி உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
காளையார்கோவில் ஒன்றியம், மாரந்தை ஊராட்சி மேட்டுக்குடி யிருப்பு கிராமத்தில் 25 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இங்கு 20 காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.
காவிரி குடிநீர் வராத காலங்களில் இக்குடி யிருப்பில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீரும் சரியாக வராத நிலையில், கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியும் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதற்காக தண்ணீர் எடுக்க செல்பவர்கள் ஒவ்வொரு முறையும் மின் மோட்டாரை இயக்கி தான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதனால் குடிநீர் விரயமாவதோடு, அடிக்கடி மின் மோட்டாரை இயக்கு வதால் பழுதாகி விடுகின்றன.
எனவே சேதமான சின்டெக்ஸ் தொட்டியை மாற்றித்தர வேண்டும் என மேட்டுக்குடியிருப்பு மக்கள் காளையார் கோவில் பி.டி.ஓ., கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.