ADDED : டிச 05, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஹைமாஸ் விளக்கு 6 மாதமாக எரியாததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சியில் மந்தை முன்பாக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஓராண்டுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.
சோலார் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்ட இவ்விளக்கு ஒரு சில மாதங்களிலேயே பழுதடைந்தது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஹைமாஸ் விளக்கை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.