/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறிவித்த நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி
/
அறிவித்த நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி
அறிவித்த நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி
அறிவித்த நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்தடையால் அவதி
ADDED : ஆக 02, 2025 11:00 PM
மானாமதுரை : மானாமதுரையில் அறிவித்த நேரத்திற்கும் மேலாக நேற்று நீண்ட நேரம் நீடித்த மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மாதந் தோறும் ஒரு நாள் மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
தற்போது ஆடியில் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மின் கம்பி அறுந்து விழுவதும், மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்வதால் ஒரு சில பகுதிகளில் நாள் கணக்கில் மின்தடை ஏற்படுகிறது.
நேற்று மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை இருக்கும் என மின் வாரியம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனால் நேற்று மாலை 5:00 மணி வரை மின்சாரம் வராத காரணத்தினால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே தினந்தோறும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் ஒரு நாள் மின்தடை என அறிவிப்பு செய்யப்படும் நிலையில் நகர்ப் பகுதியில் மட்டும் மதியம் 3:00 மணிக்குள் மின்சாரம் வந்து விடுகிறது.
ஆனால் கிராம பகுதிகளில் இரவு 10:00 மணி வரை கூட மின்தடை நீடிக்கும் நிலை உள்ளது.
ஆகவே மின்வாரிய அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.