/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி
/
குறைந்த அழுத்த மின்சாரத்தால் அவதி
ADDED : ஜூலை 24, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரிஅருகே குறைந்த அழுத்த மின் சப்ளையால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் சில மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. வீடுகளில் டிவி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. வயல்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
கச்சபட்டி, அம்மன் நகர், இடையபட்டி, திருப்பதிபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் அடிக்கடி குறைந்தழுத்த மின்சப்ளேயே வருகிறது.