/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பு இல்லாத மின்ஒயர் பல்லாங்குழி ரோடால் அவதி
/
பராமரிப்பு இல்லாத மின்ஒயர் பல்லாங்குழி ரோடால் அவதி
பராமரிப்பு இல்லாத மின்ஒயர் பல்லாங்குழி ரோடால் அவதி
பராமரிப்பு இல்லாத மின்ஒயர் பல்லாங்குழி ரோடால் அவதி
ADDED : பிப் 13, 2024 06:41 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே டி.புதுார் கிராமத்தில் மின் ஒயர்களில் செடிகள் படர்ந்தும் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சியளிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை கலெக்டர்அலுவலகம் அருகே உள்ளது டி.புதுார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நகர் 5வது தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குஉள்ள வீடுகளுக்கு செல்லக்கூடிய மின் ஒயர்களில் செடிகள் படர்ந்துள்ளது.
மின்கம்பங்களிலும் கொடி போல் செடிகள் படர்ந்து மின் வயர்களை மறைத்துள்ளது. அடிக்கடி வீடுகளில் மின் தடை ஏற்படுகிறது. இந்த தெருவில் உள்ள ரோடு முழுவதும் சேதமடைந்து பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது.
சாமுண்டீஸ்வரி கூறுகையில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லக் கூடியவர்கள் இந்த ரோட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த ரோட்டையும், மின் வயர்களில் படர்ந்துஉள்ள செடிகளை அகற்ற அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.