/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி
/
கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி
ADDED : பிப் 06, 2026 05:40 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அறுவடை துவங்கியுள்ள நிலையில் கதிரடிக்கும் களம் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, கோவில்பட்டி, எஸ்.புதுார் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
மழை குறைவு காரணமாக பல இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் போர்வெல், கிணற்று பாசன மூலம் விளைவிக்கப்பட்ட பயிர்கள் மட்டும் அறுவடைக்கு வந்துள்ளது.
தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில் இயந்திரங்களைக் பயன்படுத்த முடியாதவர்கள் கைகளால் அறுவடை செய்து வருகின்றனர்.
நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்து துாசி தட்ட இப்பகுதியில் போதிய கதிரடிக்கும் களம் இல்லை.
இதனால் வயல், கண்மாய் உள்ளிட்ட கரடு முரடான பகுதிகளில் கதிரடித்து நெல்லை சேமிக்கின்றனர். எனவே அனைத்து பகுதிகளிலும் தேவையான கதிரடிக்கும் களங்களை கட்டித் தர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

