/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கல் தொகுப்புடன் வழங்க சாலுார், மேலுாரில் கரும்பு அறுவடை
/
பொங்கல் தொகுப்புடன் வழங்க சாலுார், மேலுாரில் கரும்பு அறுவடை
பொங்கல் தொகுப்புடன் வழங்க சாலுார், மேலுாரில் கரும்பு அறுவடை
பொங்கல் தொகுப்புடன் வழங்க சாலுார், மேலுாரில் கரும்பு அறுவடை
ADDED : ஜன 07, 2025 04:58 AM

சிவகங்கை: ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் வழங்க 4.17 லட்சம் கரும்பு சாலுார், மேலுாரில் இருந்து அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் கடைகளுக்கு கொண்டு வரும் பணி துவங்கியுள்ளன.
தை பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஜன.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை வீடுகள்தோறும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜன., 9 முதல் 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
829 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 கார்டுதாரர்களுக்கு வழங்க நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரிசி, சர்க்கரை அனுப்பப்பட்டு வருகிறது. கரும்பு வழங்கும் நோக்கில், சிவகங்கை அருகே சாலுார், மதுரை மாவட்டம் மேலுார் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
ஏற்பாடுகளை கூட்டுறவு இணை பதிவாளர்ராஜேந்திர பிரசாத், துணை பதிவாளர் (பொது வினியோகம்) பாபு செய்து வருகின்றனர்.