/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் குவிந்த கரும்புகள்
/
சிங்கம்புணரியில் குவிந்த கரும்புகள்
ADDED : ஜன 13, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பொங்கல் விற்பனைக்காக மேலூரில் விளைந்த கரும்புகள் வந்துள்ளன.
சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் இந்தாண்டு கரும்பு சாகுபடி குறைவாகவே செய்யப்பட்டது. இதனால் பொங்கலுக்கு வெளியூர் கரும்புகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேலூர், கொடுக்கம்பட்டி, தும்பைப்பட்டியில் இருந்து விவசாயிகள் கரும்புகளை விற்பனைக்காக எடுத்து வந்துள்ளனர். இங்கு 5 முதல் 9 அடி உயரம் வரையிலான கரும்பு கட்டு ஒன்று ரூ.400 முதல் 500 வரை விற்கின்றன.