/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆயுதப்படை மகாமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
/
ஆயுதப்படை மகாமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
ADDED : ஆக 16, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளியான நேற்று காலை அம் மனுக்கு சிறப்பு பூஜை, யாகவேள்வி நடந்தது. மதியம் 12:00 மணிக்கு 7 சிறுமிகளுக்கு கன்னி பூஜை செய்து, அவர்களுக்கு வளையல், கண்ணாடி உள்ளிட்ட அலங்கார பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகாமாரியம்மன் முன், சுமங்கலிகள் அமர்ந்து பூஜை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மதியம் 1:00 மணிக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடத்தினர்.