ADDED : ஜன 25, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் டி.இ.எல்.சி., மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் உபகரணங்களை அப்துல்கலாம் மனித நேய மாற்றம் அறக்கட்டளையினர் வழங்கினர்.
திருப்புத்துாரில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு 'டிவி', சாகாதாரப் பொருட்கள், ஸ்வெட்டர், மிக்ஸி, முதலியவற்றை அறக்கட்டளையினர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியை வி.ஜெசிலீலா வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் எஸ்.அழகர்சாமி, தாளாளர் ஏ.சத்தியதாஸ், இசை ஆசிரியர் வைகைபிரபா, மாற்றுத்திறனாளிகள் சங்கதலைவர் ஆர் கண்ணன் பங்கேற்றனர். ஆர்.இளவரசன் பொருட்களை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
ஆசிரியர் டி.ஏ.அருண்சுகந்த் நன்றி கூறினார்.

