/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரியக்குடிக்கு பள்ளிக்கு உபகரணம் வழங்கல்
/
அரியக்குடிக்கு பள்ளிக்கு உபகரணம் வழங்கல்
ADDED : மார் 15, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் அரியக்குடி, இலுப்பக்குடி, அமராவதிபுதுார், காரைக்குடி செஞ்சை உள்ளிட்ட பகுதியில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ முயற்சியால், வடஅமெரிக்காவில் மிக்சிகன் நகரில் வசிக்கும் நகரத்தார் சங்கத்தினர், இப்பள்ளிக்கு தேவையான மேஜை, பெஞ்ச் வசதிகளை மேற்கொள்ள ரூ.4.5 லட்சம் ஒதுக்கினர்.
இந்த நிதியின் மூலம் மாணவர் தேவைக்கு ஏற்ப பெஞ்ச், மேஜை வாங்கப்பட்டுள்ளது. நிதி உதவி அளித்த பழனியப்பன், உதவிய மணி சுவாமிநாதன், சபாரத்தினம் ஆகியோருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.