/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருத்தாளருக்கு ‛டேப்லெட்' வழங்கல்
/
கருத்தாளருக்கு ‛டேப்லெட்' வழங்கல்
ADDED : அக் 05, 2024 04:13 AM

சிவகங்கை: சிவகங்கையில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு 'டேப்லெட்' வழங்குதல் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்டத்தில் அரசு நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகள் என 385 பள்ளிகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர்கள் சென்று 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடத்தில் எளிய சோதனைகளை செய்து காண்பித்து, அவர்களை திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியில் உள்ள கருத்தாளர்களுக்கு 'டேப்லெட்' வழங்குதல் மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் இயக்க கிளை தலைவர் மணவாளன் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வடிவேல், உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ கருத்தாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினார்.
கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அழகப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் பிரபு, கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், கருத்தாளர்கள் பிரியங்கா, பாண்டி செல்வி, ராஜயோகம், செந்தாமரை செல்வி, பயிற்சி அளித்தனர். கருத்தாளர் ஜோதி நன்றி கூறினார்.