ADDED : ஜூலை 18, 2025 11:56 PM
மானாமதுரை: மானாமதுரை வட்டார தோட்டக்கலை துறையில் காய்கறி எளிதாக கிடைக்கவும், எளிய முறையில் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், அன்றாட தேவையான காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யவும், வீட்டிலேயே இயற்கை முறையில் விளைவிக்க ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் இலவசமாக கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய், கீரை மற்றும் கொத்தவரை என 6 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய காய்கறி தொகுப்புகளும், பப்பாளி, எலுமிச்சை, கொய்யா உள்ளடங்கிய 3 வகையான பழக்கன்று தொகுப்புகளும் மற்றும் வீட்டின் மாடியில் தோட்டம் செய்யத் தேவையான மாடித்தோட்ட தொகுப்பு 50 சதவீதம் மானியத்தில் ரூ.450 மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
தொகுப்பு பெற முன்பதிவு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களது ஆதார், குடும்ப அட்டை நகல்,2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தொலைபேசி எண்ணை கொடுத்து மானாமதுரை வட்டார தோட்டக்கலை அலுவலகத்தில் பயன்பெறலாம் எனவும் அல்லது www.tnhoriculture.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மானாமதுரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

