/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் காட்சிப்பொருளான கண்காணிப்பு கேமரா: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

ADDED : செப் 19, 2025 02:04 AM

காரைக்குடி உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, சோமநாதபுரம், அழகப்பாபுரம், பள்ளத்துார், சாக்கோட்டை, குன்றக்குடி, செட்டிநாடு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 10 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. தவிர, போக்குவரத்து மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பிரிவுகளும் செயல்படுகிறது.
காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் 400 போலீசார் இருக்க வேண்டிய நிலையில் 300க்கும் குறைவான போலீசாரே இருந்தனர். இன்றளவும் குறைவான எண்ணிக்கையிலேயே போலீசார் உள்ளனர். இதனால கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுவதோடு போலீசார் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றங்களை தடுக்க காரைக்குடி நகரின் முக்கிய சாலைகளான தேவர்சிலை, ராஜிவ் சிலை, பெரியார் சிலை, பர்ஸ்ட் பீட், செகண்ட் பீட், 100 அடி ரோடு, கழனிவாசல் கல்லூரி சாலை உட்பட பல இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல கேமராக்கள் செயல்பாடின்றி காட்சி பொருளாக இருக்கிறது.
முக்கியச் சாலைகளில் நடைபெறும் விபத்து, வழிப்பறி உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க முடியாமலும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முடியாமலும் போலீசார் சிரமப்படுகின்றனர். பயன்பாடின்றி காட்சி பொருளாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏ.எஸ்.பி., ஆசிஸ் புனியா கூறுகையில்: நகரின் முக்கிய இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை கண்டறிந்து முறையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.