/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முக்கிய சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
/
முக்கிய சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
முக்கிய சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
முக்கிய சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்
ADDED : ஆக 20, 2024 07:22 AM
மானாமதுரை போலீஸ் சப்டிவிஷனுக்கு உட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, பழையனூர், திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலை, சிவகங்கையிருந்து பூவந்தி வழியாக செல்லும் மதுரை சாலை, மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடந்த சில மாதங்களாக அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சசிவர்ணம் என்பவர் மானாமதுரை அருகே மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கால்பிரவு விலக்கு ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக பலியானார். இதேபோன்று இந்த ரோட்டில் அடிக்கடி அடையாளம் தெரியாத வாகனங்களால் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுபோன்று அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு பலியானவர்களின் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பலியானவர்களின் உறவினர்கள் சிலர் கூறியதாவது, அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு பலியானவர்களுக்கு விபத்து காப்பீடு பெறுவதற்கு நீண்ட காலமாக மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது.
ஆகவே போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிற நிலையில் ஒவ்வொரு ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக அந்தந்த பகுதி ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடப்பதாக தெரிவித்தனர்.

