/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதை விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
/
விதை விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மே 23, 2025 11:43 PM
சிவகங்கை: மாவட்டத்தில் நடப்பாண்டு அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் 1382 முறை கண்காணித்துள்ளதாக விதை ஆய்வு இணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்பு விதை ஆய்வு பிரிவு மூலம் அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படும்.
4 ஆண்டில் 5157 முறை ஆய்வு செய்துள்ளோம். ஆய்வின் போது இந்திய விதை சட்டம் மற்றும் ஆணைகளை விதை விற்பனை நிலையத்தினர் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
தரமான விதையை உறுதி செய்ய விதை மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
2021ல் 710, 2022ல் 718, 2023ல் 702, 2024ல் 618 முறைகளில் விதை மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்தோம். இதன் மூலம் விதையின் தன்மை அறிந்து விவசாயிகள் நடவு செய்ய வைப்பதாகும்.
இது போன்று பணி விதை மாதிரி சேகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட செய்துள்ளோம், என்றார். சிவகங்கை விதை ஆய்வாளர் அழகர்ராஜா உடனிருந்தார்.