/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளி விற்பனை ஜோர் திருட்டை தடுக்க கண்காணிப்பு
/
தீபாவளி விற்பனை ஜோர் திருட்டை தடுக்க கண்காணிப்பு
ADDED : அக் 19, 2025 06:10 AM
சிவகங்கை: தீபாவளிக்கு துணி கடைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியுள்ள நிலையில் சிவகங்கை நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி நாளை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பஸ் ஸ்டாண்ட், அரண்மனை பகுதி, காந்திவீதி, நேரு பஜார் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
துணிக்கடைகளில் சிறுவர், பெரியவர் ஆர்வமுடன் ஆடைகள் வாங்கி வருகின்றனர். இனிப்பு விற்பனையும் நடந்துவருகிறது. இன்றும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ரோந்து வாயிலாகவும், சி.சி.டி.வி., கேமராக்களாலும் கண்காணிக்கின்றனர்.