/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்
/
மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்
மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்
மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே பணி துவக்கம்
ADDED : டிச 25, 2024 08:11 AM
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றுப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே பணி துவங்கியுள்ளது.
மானாமதுரையில் ஓடும் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பு அதிகமானதை தொடர்ந்து அதனை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மானாமதுரை வருவாய்த்துறை அலுவலகத்தில் வைகையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நேற்று மானாமதுரை சோனையா கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை சர்வேயர் மற்றும் வருவாய்த்துறையினர் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன் குமார், உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த பின் கூறியதாவது: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓடும் வைகை ஆற்றில் இரு கரைகளிலும் சர்வே முடிந்த பின்னர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிய பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.